ரேஸிங் டிராக்கை பார்க்க முதலமைச்சர் விஜய் வந்துள்ளார் - அஜித்.
முதலமைச்சர் விஜய் லண்டன் ரேஸிங் டிராக்கை பார்க்க வந்தது மகிழ்ச்சி.
நடிகர் அஜித் பேட்டி
நடிகர் அஜித்தின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் கார் ரேஸ் மைதானம் அமைக்க தமிழக முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் அறிவிப்பு செய்தார். லண்டனில் நடைபெறும் கார் ரேசிங் போட்டியை காண தமிழக முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் அழைப்பு விடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட முதல்வர் விஜய் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உட்பட அதிகாரிகள் லண்டன் சென்றுள்ளனர். லண்டனில் நடைபெறும் போட்டியை இன்று நேரில் காண உள்ளனர்.
லண்டனில் நடக்கும் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் நடிகர் அஜித் லண்டனில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,
தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையை மேம்படுத்த முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது.
தன் கடுமையான பணிச் சூழலுக்கிடையே முதலமைச்சர் ஜோசப் விஜய் லண்டன் வந்துள்ளார்.
லண்டனில் உள்ள 'சில்வர் ஸ்டோன்' ரேஸிங் டிராக் போன்றதை சென்னையில் உருவாக்க முதலமைச்சர் விஜய் ஆர்வம் காட்டியது பெருமையாக உள்ளது.
எனக்கும் லண்டனில் நடப்பது போன்ற போட்டிகள் சென்னையில் நடைபெற வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்கான முயற்சியை முதல்வர் எடுத்தது பாராட்டுக்குரியது. என்னுடைய கோரிக்கையை ஏற்று கார் ரேசை காண வந்த முதல்வர் விஜய்க்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று லண்டனில் அஜித் குமார் பேட்டியில் தெரிவித்துள்ளார்.