News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

இந்தியா

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் - ரஜோரி பகுதியில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு:

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் - ரஜோரி பகுதியில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு: - 1
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் - ரஜோரி பகுதியில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு: - 2
எழுத்தாளர் / Author

Kathiravan

newstodaytamill@gmail.com

உண்மையான மற்றும் உடனுக்குடனான செய்திகளை வாசகர்களுக்குத் துல்லியமாக வழங்குவதில் அனுபவம் மிக்க செய்தி ஆசிரியர்.

Published: 20 Jul 2026, 12:00 AM Updated: 20 Jul 2026, 12:00 AM
Updated on: 20 Jul 2026, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை பெய்த கனமழையால் திடீர் வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டன. இதில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் மாயமாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதையடுத்து நேற்று அதிகாலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதுடன் நிலச்சரிவும் ஏற்பட்டது. வெள்ளத்தில் 250-க்கும் மேற்பட்ட கார்கள் அடித்து செல்லப்பட்டன. பல வீடுகள் இடிந்தன. சாலைகள் சேதமடைந்தன.

ரஜோரி நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால், அப்பகுதியில் வசித்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். அங்கு மீட்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதனிடையே வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழு ஈடுபட்டுள்ளது.

கனமழை காரணமாக, ரியாசி மாவட்டத்தில் உள்ள சலால் அணையின் அனைத்து மதகுகளை யும் திறக்க அதிகாரிகள் உத்தர விட்டனர். இதனால் செனாப் நதியின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. நிலைமை சீராகும் வரை நதிக்கரையில் வசிக்கும் மக்கள் அதன் அருகில் செல்ல வேண்டாம் என்றும், மீன்பிடித்தல், குளித்தல், கால்நடைகளை மேய்த்தல் அல்லது நதியைக் கடக்க முயற்சிப்பதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களின் நிலைமை குறித்து துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆய்வு செய்தார். முதல்வர் உமர் அப்துல்லா எக்ஸ் தளத்தில் கூறும்போது, ”மக்களின் உயிரைப் பாதுகாப்பதே நிர்வாகத்தின் முதன்மையான முன்னுரிமை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்திய மான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.


News Today Tamil Editor

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.