ஒடிசாவில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பெண் உள்பட மூன்று மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கிச் சண்டை பெல்கர் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட கும்மா காட்டில் நடைபெற்றது.
இந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் சிபிஐ (மாவோயிஸ்ட்) கடசியின் உறுப்பினர் பாரி என்ற ராகேஷ் என்றும், மற்றொருவர் தள உறுப்பினர் அம்ரித் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் சத்தீஸ்கர் மாரிநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் இருவருக்கும் ரூ.23.65 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. மற்றொரு பெண் மாவோயிஸ்ட்டின் உடல் இன்று காலை மோதல் நடந்த இடத்திற்கு அருகில் இருந்து மீட்கப்பட்டதாக காவல் அதிகாரி தெரிவித்தார். அவர் இன்னும் அடையளாம் காணப்படவில்லை என்றும் தெரிவித்தார். மாவோயிஸ்டுகளிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி, 303 துப்பாக்கி, ஒரு வாக்கி டாக்கி பறிமுதல் செய்யப்பட்டன.