News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

தமிழகத்தை முருகனால் கூட காப்பாற்ற முடியாதுதிமுக ஆட்சிக்கு வந்தால்

தமிழகத்தை முருகனால் கூட காப்பாற்ற முடியாதுதிமுக ஆட்சிக்கு வந்தால்
0 கருத்துக்கள்

அரசின் முடிவால் அரசு அதிகாரிகள் பலிகடாகி, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள். 


மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை முருகனால் கூட காப்பாற்ற முடியாது 


சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் ஒரு மாத காலமாக பதட்டமான சூழ்நிலை இருப்பது என்பது திக்கு தெரிய காட்டில் அலைவது போல தமிழக மக்களுக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தின் நிர்வாகம் தடுமாறி கொண்டிருக்கிறது. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற நீதியரசர் அனுமதி அளித்தும், நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல ஸ்டாலின் திமுக அரசு அடம்பிடிக்கிறது. 

திருப்பரங்குன்றம் முருகனையும்,. தர்கா சிக்கந்தர் பாஷாவையும் நாங்கள் ஒன்றாக கருதுகிறோம் என்று கூறுகிறார்கள் என்றாலும், கார்த்திகை தீபநாளில் முருக பக்தர்கள் தீபம் ஏற்ற அனுமதி அளித்திருந்தால் தற்போது ஒரு மாத காலமாக தொடரும் களோபரங்கள், பதட்டங்கள் இதுபோன்ற சூழ்நிலைக்கு வேலை இல்லாமல் போய் இருக்கும் என்று இஸ்லாமிய மக்களும், இந்துக்களும் ஒத்த கருத்துடன் தெரிவித்துள்ளார்கள். 

தொடர்ந்து ஒரு மாத காலமாக நிகழ்வில் பல்வேறு அதிர்வுகளை சந்தித்த ஸ்டாலின் அரசு ஒரு உயிரை பறிகொடுத்தும் இன்னமும் உணரவில்லை.



ஸ்டாலின் அரசின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் மூலம் இன்றைக்கு அறநிலைய துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைவரும் தங்கள் செய்ய வேண்டிய பணிகளில் கவனத்தை செலுத்த முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர் அவர்களால் வெளியே சொல்ல முடியவில்லை. 


இன்றைக்கு நீதிமன்றம் கண்டனத்திற்கு அரசு அதிகாரிகள் பலிகடா ஆகவேண்டிய சூழ்நிலை உருவாக்கியது.இதனால் அரசின் நிர்வாகம் முடங்கிப் போய் உள்ளது. 


அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக செயல்படும் திமுக அரசுக்கு முற்றுப்புளி வைக்கும் காலம் வந்து விட்டது . மீண்டும் திமுக ஆட்சி வந்தால் முருகனால் கூட நம்மை காப்பாற்ற முடியாது என கூறினார்.

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!