News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு நலம்
இந்தியா

தீபத்தூணில் நாளை கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்

தீபத்தூணில் நாளை கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்
0 கருத்துக்கள்

தீபத்தூணில் நாளை (நவம்பர் 28, 2026) கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடி உத்தரவு


மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் (கல் தூண்) கார்த்திகை தீபம் ஏற்றாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (நவம்பர் 27, 2026) அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

 ​

​நாளை தீபம் ஏற்ற உத்தரவு: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நாளை (நவம்பர் 28, 2026) கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கார்த்திகை தீபத் திருநாளில் விளக்கு ஏற்றப்பட்ட இடத்திலிருந்து தீபம் எடுத்துச் சென்று மலை உச்சியில் உள்ள தீபத்தூரணில் தீபம் ஏற்ற வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

 ​அறங்காவலர் குழு கலைப்பு : உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் தீர்மானம் நிறைவேற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்ட திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்து (கலைத்து) நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 நவம்பர் 20-ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நவம்பர் 24-ஆம் தேதி நிறைவேற்றத் தவறியதற்காக, மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த்கிருஷ்ணா, தலைமைச் செயலர் சாய்குமார் உள்ளிட்ட தமிழக அரசு அதிகாரிகளுக்கு நீதிமன்ற அவமதிப்பு (Contempt Notice) நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி விசாரிக்கப்படுகிறது. 

 ​நீதிபதிகளின் கடும் கண்டனம்: விசாரணையின்போது, "உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை யாராலும் நீர்த்துப்போகச் செய்ய முடியாது; அரசியலமைப்புச் சிக்கலை உருவாக்க யாராவது. முயற்சித்தால், அதனை நாங்கள் சரிசெய்வோம்" என நீதிபதிகள் கடும் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், கோயில் அறங்காவலர் குழுவைக் காரணம் காட்டி மதுரை மாவட்ட ஆட்சியர் தனது பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது என்றும் கண்டனம் தெரிவித்தனர். திருப்பரங்குன்றம் மலை முழுவதும் மத்திய பாதுகாப்பு படையினர் எடுத்து பாதுகாப்பில் ஈடுபட வேண்டும். மலை மேல் உள்ள டக்கா வெற்றி 50 மீட்டருக்கு மேல் பக்தர்கள் யார் வேண்டுமானாலும் தீபம் ஏற்றலாம். அதே நேரலையில் தற்காவிற்கு செல்லும் பக்தர்களை யாரும் தடுக்காமல் இருப்பதை மத்திய பாதுகாப்பு படையினர் உறுதி செய்ய வேண்டும். 

 ​வழக்கின் பின்னணி:

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அளித்த தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்தபோதிலும், இந்த ஆண்டு மட்டும் நவம்பர் 24-ஆம் தேதி தீபத்தூணில் தீபம் ஏற்ற நவம்பர் 20-ஆம் தேதி இடைக்கால உத்தரவிட்டது. ஆனால், அன்றைய தினம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததைத் தொடர்ந்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் மீது இன்று இந்த முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!