News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ்நாடு

இருமொழிக் கொள்கை தொடரும், புதிய கல்விக் கொள்கை ஏற்கப்படாது:தமிழக ஆளுநர் உரை:

இருமொழிக் கொள்கை தொடரும், புதிய கல்விக் கொள்கை ஏற்கப்படாது:தமிழக ஆளுநர் உரை:
NEWS TODAY TAMIL
Updated on: 18 Jun 2026, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

சென்னை: தமிழகத்தின் 17–வது சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தலைமையில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது.கூட்டத்தொடர் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது, இரண்டாவதாக தேசிய கீதம் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆளுநர் அர்லேகர் உரையை வாசித்தார்.

முன்னதாக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாக்களின் போது, ஆளுநர் மாளிகையில் முதலில் வந்தே மாதரமும், இரண்டாவதாக தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த் தாய் வாழ்த்தும் பாடப்பட்டது சர்ச்சையை உருவாக்கியது. இந்தச் சூழலில், இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவர் தனது உரையை 39 நிமிடங்களில் நிறைவு செய்தார். 

ஆளுநர் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு: பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரை கொள்கை தலைவர்களாக கொண்டு, சாதி, மத, பண அரசியலை தாண்டி தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முதல்வர் விஜய்யால் மட்டுமே முடியும் என மக்கள் முடிவு செய்து தேர்தெடுத்து ள்ளனர்.

தமிழக அரசு வரலாற்றில் இல்லாத வகையில் ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்று கூட்டணி ஆட்சி மூலம் புதிய சாதனை செய்யப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு தமிழகத்துக்கு தேவையான உதவிகளை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்றிய அரசுக்கு தமிழக மக்கள் செலுத்தும் வரியிலிருந்து, தமிழகத்துக்கு உரிய நிதிப்பகிர்வினைப்பெற சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

தமிழகத்தில் மாநில நலன் குறித்து ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும். ஒன்றிய அரசிடம் இருந்து தமிழகத்துக்கான நிதிப் பகிர்வினை பெற சட்டவல்லுநர் குழு அமைக்கப்படும். தமிழகத்துக்கு வரவேண்டிய ஒவ்வொரு ரூபாய் வருவாயும் முறையாக ஆவணப் படுத்தப்பட்டு, தமிழகத்துக்கான ஒன்றிய அரசின் பாரபட்சமான அணுகுமுறை அறிக்கையாக வெளியிடப்படும். தமிழகத்துக்கான நியாயமான நிதிப்பகிர்வை ஒன்றிய அரசிடம் இருந்து பெறுவது உறுதிசெய்யப்படும்.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் நிதி நிலைமை மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. தமிழகத்தில் கடன் அளவு ரூ.10 லட்சம் கோடியை எட்டியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் இரு மடங்காக உயர்ந்துள்ளது. நிதிப்பற்றாக்குறை இருந்தாலும், இந்த அரசு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். போதைப் பொருளை முழுமையாக ஒழிக்க இந்த அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறது.

மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு பாதுக்காப்பான சூழலை உருவாக்குவதே இந்த அரசின் நோக்கம் ஆகும். தவறு செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

வழிபாட்டு தலங்கள், பள்ளிகளுக்கு அருகில் இருந்த 717 மதுக்கடைகளை இந்த அரசு மூடியுள்ளது. கனிமவளத்துறையில் நடக்கும் ஊழல் மூலம், அந்த துறையின் வருவாய் குறைந்துள்ளது. இயற்கை வளக் கொள்ளையை தடுத்து அரசின் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறு, குறு விவசாயிகள் பெற்ற ரூ.75 ஆயிரம் வரையிலான கடன் முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட்டது. நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

மேகேதாட்டு விவகாரத்தில் தமிழகத்தின் சட்ட நடவடிக்கைகள் தொடரும். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், தமிழகத்துக்கு உபரி நீரை மட்டுமே கர்நாடக அரசு கொடுத்து வருகிறது.லஞ்ச, ஊழல் இல்லாத நேர்மையான நிர்வாகத்தை கொண்டு வருவதே இந்த அரசின் நோக்கம்.

தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே தொடரும். கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தப் படும். புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கும்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக மாற்ற அனுமதிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னை யில் அமைக்க வலியுறுத்தப்படும்.

முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக கேரள அரசு அணை கட்டும் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்தும். கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய அரசு சாதிவாரி கணகெடுப்பை விரைந்து முடிக்க வேண்டும். மத்திய அரசின் கணக்கெடுப்பு முடிந்தவுடன், தமிழக அரசு சமூக நீதி சர்வே நடத்தும்.

மீனவர் பிரச்சினையை தீர்க்க ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும். ஒற்றை சாளர முறையில் தொழில் தொடங்க அனுமதி வழங்கப்படும். 2031ல் இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக தமிழகம் மாறும்.

இந்து சமய அறநிலையத்துறையில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்படும். இவ்வாறு ஆளுநர் உரையில் தவெக அரசின் நிலைப்பாடுகள் பலவும் தெரிவி

க்கப்பட்டுள்ளன.



இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.