எம்.பி.க்கள் கூட்டத்தை திமுக புறக்கணித்தது .
தேமுதிக, ம நீ ம புறக்கணிப்பு
தொகுதி மறுவரையறை குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் எம்.பி.க்கள் கூட்டத்தை திமுக புறக்கணித்தது .
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டம் என்ற பெயரில் த.வெ.க. அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் திமுக பங்கேற்காது.
தமிழ்நாட்டின் காவிரி உரிமையிலும் டெல்டா உழவர்கள் மீதும் இந்த அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், மேகதாது அணைக்கு எதிராக சட்டமன்றத்தில் நாம் நிறைவேற்றிய தீர்மானத்தை நமது எம்.பி.க்களுடன் சென்று மத்திய ஜல் சக்தி அமைச்சரிடம் நேரில் வழங்கிட முதலமைச்சர் விஜய் தயாரா? - என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பி உள்ளார் .
இதனிடையே தொகுதி மறுவரையறைக்கான எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தை தேமுதிகவும் புறக்கணித்துள்ளதுள்ள நிலையில், எம்.பி. கமல்ஹாசனும் அமெரிக்காவில் உள்ளதால் மநீமமும் இதில் கலந்து கொள்ளாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலையில் எட்டு கட்சி எம்பிக்கள் கூட்டத்திற்கு திமுக தலைமைக்கு நேரடியாக அரசு தரப்பில் கடிதம் எழுதவில்லை என்றும், ஒவ்வொரு எம்பிக்களுக்கும் தனிப்பட்ட முறையில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
கட்சி தலைமை கூறாமல் நாங்கள் மட்டும் எப்படி வர முடியும் என்று திமுக எம்பிக்கள் கூறி வருகின்றனர்.