News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

ரோட்டரி சங்கங்கள் நடத்திய குழந்தைகள் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

ரோட்டரி சங்கங்கள் நடத்திய குழந்தைகள் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
0 கருத்துக்கள்

குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி.

 

 மதுரை மாவட்ட ரோட்டரி சங்கங்கள் இணைந்து நடத்தியது.

 

 ரோட்டரி மாவட்டம் 3000-ன் கனவுத் திட்டங்களில் ஒன்றான எதிரொலி என்னும் குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு மதுரை அனைத்து ரோட்டரி சங்கங்களின் சார்பில் நடைபெற்றது.

 இதையொட்டி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரோட்டரி சங்கங்களின் சார்பில் குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி மடிசியா அரங்கில் இருந்து தொடங்கி காந்தி மியூசியம் வரை நடைபெற்றது.

 இந்த விழிப்புணர்வு பேரணிக்கு நிகழ்ச்சி தலைவரும் நிகழ்ச்சி தலைவரும், மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.கதிரவன் தலைமை தாங்கினார். மதுரை மாவட்ட அனைத்து ரோட்டரி சங்கங்களின் தலைவர்கள் பிரவீன் குமார், அல் காசிம், செயலாளர் பிரசன்னா, பொருளாளர் ரம்யா ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தனர்.

 நிகழ்ச்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக கலந்து கொண்ட ரோட்டரி மாவட்ட ஆளுநர் திரு. ஜே. கார்த்திக் அவர்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்பது குறித்து பேசினார்.

 சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை மாநகர் காவல்துறை போக்குவரத்து துணை ஆணையர் எஸ். வனிதா அவர்கள் சிறப்புரையாற்றி கொடியசைத்து வைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இப்பேரணியில் அரபிந்தோ மீரா கல்வியியல் கல்லூரி, இ எம் ஜி யாதவா பெண்கள் l கல்லூரி, லேடி டோக் கல்லூரி, எம் ஏ வி எம் எம் கல்லூரி மற்றும் மங்கையர்கரசி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து ரோட்டரி சங்கங்களை சேர்ந்த தலைவர்கள், செயலாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆண்டனி பிரேம்குமார், ரமேஷ், உதவி ஆளுநர்கள் சுரேஷ் பாண்டியன், மோசஸ் பியர்ஸ், நாகலட்சுமி, மனோகர், சிவசங்கர், கணேசன், ராம் சுந்தர், ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். பேரணையின் போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!