லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு வழக்கு 8 சிறப்பு நீதிமன்றங்கள் தரம் உயர்வு.
தமிழக அரசு உத்தரவு
சென்னை, கோவை, திருச்சி, மதுரை, விழுப்புரம், சேலம், சிவகங்கை மற்றும் திருநெல்வேலி ஆகிய 8 சிறப்பு நீதிமன்றங்கள், மாவட்ட நீதிபதி அந்தஸ்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசின் அரசாணை எண்.259, நாள் 07.08.2026 மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Prevention of Corruption Act-ன் கீழ், காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை செய்யும் வழக்குகளை இந்த சிறப்பு நீதிமன்றங்கள் விசாரிக்கும்.