சிக்கிமில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 4.5 ரிக்டர் அளவில் பதிவானது.
சிக்கிம் மாநிலத்தின் கியால்ஷிங் பகுதியில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை சுமார் 1.09 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.உறக்கத்தில் இருந்தமக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்து, அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 அலகுகளாகப் பதிவானது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் 5 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.கடந்த சில நாளாக வடகிழக்கு மாநிலங்களில் லேசான நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.