News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
இந்தியா

பயண நேரத்தைக் குறைத்துள்ள நான்கு வழி சுற்றுவட்ட நெடுஞ்சாலை

பயண நேரத்தைக் குறைத்துள்ள நான்கு வழி சுற்றுவட்ட நெடுஞ்சாலை
0 கருத்துக்கள்


பயண நேரத்தைக் குறைத்துள்ள மதுரை வாடிப்பட்டி – தாமரைப்பட்டி நான்கு வழி சுற்றுவட்ட நெடுஞ்சாலை


இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் இணைந்து, மதுரை சுற்றுவட்டச் சாலையின் ஒரு பகுதியாக உள்ள தேசிய நெடுஞ்சாலை 744A-ன் வாடிப்பட்டி – தாமரைப்பட்டி நான்கு வழிச்சாலை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த அக்டோபர் 11 அன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.


இத்திட்டத்தின் உள்கட்டமைப்பு வசதிகள், சாலைப் பாதுகாப்பு அம்சங்கள், வனவிலங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள், பொதுமக்களுக்கான வசதிகள் ஆகியவற்றை அறிந்துகொள்ளும் வகையில் செய்தியாளர் களப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. ரூ.1,024 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 30 கிலோமீட்டர் நீளமுள்ள நான்கு வழிச்சாலையை ஊடகவியலாளர்கள் பார்வையிட்டனர். இச்சாலை தேசிய நெடுஞ்சாலை 44, தேசிய நெடுஞ்சாலை 38 ஆகியவற்றை இணைக்கிறது.


களப்பயணத்தின்போது, மதுரையிலுள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட அமலாக்கப் பிரிவுத் திட்ட இயக்குநர் ஆர். முருகப்பிரகாஷ், திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் மூலம் போக்குவரத்தைக் கண்காணிக்கும் மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பு, விபத்துகள், போக்குவரத்து நெரிசல், சாலை அபாயங்கள் குறித்த உடனடித் தகவல்களை வழங்கும் தகவல் பலகைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.


இந்தச் சாலையில் வாகனங்களின் சராசரி வேகம் மணிக்கு 40 கிலோமீட்டரிலிருந்து 100 கிலோமீட்டராக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயண நேரம் சுமார் 45 நிமிடங்களிலிருந்து 20 நிமிடங்களாகக் குறையும். இதன் மூலம் மதுரை நகரில் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், இப்பகுதியின் போக்குவரத்து இணைப்பும் மேம்படும்.

மதுரையைச் சுற்றியுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள், தொழிற்சாலைகள், வணிக மையங்கள் ஆகியவற்றுக்கான இணைப்பு மேம்படுவதால் சுற்றுலா, தொழில் வளர்ச்சி ஆகியவை ஊக்கமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள், சரக்கு வாகனங்கள், வணிக வாகனங்கள் விரைவாகவும் தடையின்றியும் பயணிப்பதன் மூலம் பிராந்திய வர்த்தகம் வலுப்பெறுவதுடன், சரக்குப் போக்குவரத்துத் திறன் மேம்பட்டு, தென் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும்.

வகுத்தமலை – வன்னாத்திக்கரடு பகுதிகளுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் முதல் வனவிலங்கு மேம்பாலம் இந்தக் களப்பயணத்தின் முக்கிய அம்சமாக அமைந்தது. 35.2 மீட்டர் நீளமும் 20 மீட்டர் அகலமும் கொண்ட இந்த மேம்பாலம், காட்டெருமை, புள்ளிமான், காட்டுப்பன்றி, இந்திய முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் பாதுகாப்பாக கடந்து செல்வதற்கு வழிவகுக்கிறது. இதன் மூலம் வாகனங்கள் – வனவிலங்குகள் மோதல் குறைவதுடன், வனவிலங்குகளின் வாழ்விடங்களுக்கு இடையிலான தொடர்பும் பாதுகாக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நான்கு பெரிய பாலங்கள், 29 சிறிய பாலங்கள், இரண்டு மேம்பாலங்கள், வாகனச் சுரங்கப்பாதைகள், வாகன மேம்பாலங்கள், பாதசாரிகளுக்கான சுரங்கப்பாதைகள் ஆகிய முக்கிய உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!