News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

திருப்பதியில் 13.52 கோடி லட்டுகள் விற்று சாதனை

திருப்பதியில் 13.52 கோடி லட்டுகள் விற்று சாதனை
0 கருத்துக்கள்

கடந்த ஆண்டு (2025) மட்டும்  13.52 கோடி லட்டு பிர​சாதங்​களை விற்று திருப்பதி தேவஸ்தானம் சாதனை படைத்துள்ளது. 

உலக அளவில் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் தனித்துவம் வாய்ந்ததாகும். திருப்பதி செல்லும் பக்தர்கள் முடி காணிக்கை கொடுப்பதை எப்படி வழக்கமாக வைத்துள்ளனரோ, அதே போல லட்டு பிரசாதம் வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவியேற்ற பின்பு திருப்பதி கோயிலின் லட்டு பிரசாதத்தின் தரம் உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக லட்டு பிரசாத விற்பனையும் அதிகரித்துள்ளது.

திருப்பதியில் கடந்த 2024-ம் ஆண்​டில் 12.15 கோடி லட்​டு​கள் விற்​பனை​யானது.  2025-ம் ஆண்டில் 13.52 கோடி லட்டு  விற்​பனை​யாகி சாதனை படைத்​துள்​ளது. இதில் கடந்த டிசம்​பர் 27-ம் தேதி மட்​டும் ஒரே நாளில் 5.13 லட்​சம் லட்​டு​கள் விற்​பனை​யானது. கடந்த ஓராண்​டாக நாள் ஒன்​றுக்கு 4 லட்​சம் லட்​டு​கள் விற்​பனை​யாகியுள்​ளன. பிரம்​மோற்​சவம், வைகுண்ட ஏகாதசி, ரதசப்​தமி உள்​ளிட்ட முக்​கிய நாட்​களில் தின​மும் 8 முதல் 10 லட்​சம் லட்​டு​கள் விற்​பனைக்கு வைக்​கப்​படுகிறது. லட்டு பிரசாதத்தை  தயார் செய்ய  ஏழு​மலை​யான் கோயில் மடப்​பள்​ளி​யில்  700 ஊழியர்​கள் பணி​யாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!