கைது காமெடியாக உள்ளது. நான் பயப்படமாட்டேன்" - உதயநிதி பேட்டி
நடிகை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் கைது செய்யப்பட்ட உதயநிதி, மேல்நடவடிக்கைக்காக தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் .
பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.
கைது நடவடிக்கையின்போது போலீஸ் வாகனம் முன்பு திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர்.
"நான் பேசாததை பேசியதாக Cut, Copy, Paste செய்து பொய் செய்தி பரப்பியுள்ளனர்; இதை சட்டரீதியாக எதிர்கொள்வேன். இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். என்னை கைது செய்ததை பார்க்கும்போது காமெடியாக உள்ளது" என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.