News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ்நாடு

தேர்தல் பொறுப்புகளில் விலகிய அண்ணாமலை- பாஜக அதிர்ச்சி!

தேர்தல் பொறுப்புகளில் விலகிய அண்ணாமலை- பாஜக அதிர்ச்சி!
0 கருத்துக்கள்

தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் சில மாதங்கள் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, தமாகா, பாமக(அன்புமணி) உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன.  கூட்டணி முடிவான நிலையில், பிரசார பணிகளில் பாஜக ஈடுபட்டுள்ளது. சிங்காநல்லூர், விருகம்பாக்கம் உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கு பாஜகவின் பொறுப்பாளராக அண்ணாமலையை  கட்சி தலைமை நியமித்திருந்தது.

இந்த நிலையில், தது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை கவனித்துக் கொள்ள வேண்டியிருப்பதால், தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் இன்று (பிப்ரவரி 3) கூறுகையில், ”பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஏற்றுக்கொண்ட 16-வது நிதிக்குழுவின் பரிந்துரை தமிழகம் பலன் அடைந்துள்ளது. குறிப்பாக வரி பகிர்வில் நாட்டின் வளர்ச்சிக்கு 10 சதவீத நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது, இது எதிர்கட்சிகளின் வாயை அடைத்துள்ளது.

திமுக அமைச்சர்களை அழைத்து அண்ணாவை பற்றி 10 வரிகள் எழுதச் சொன்னால் யாருக்கும் எழுதத் தெரியாது. இன்றைக்குகூட தேர்வு வைத்து பாருங்கள், யாருக்கும் தெரியாது. அண்ணா, அண்ணா  என்று அவர் பிறந்தநாள், நினைவுநாளில் பேசுவதை மட்டுமே வாடிக்கையாக வைத்துள்ளனர்.  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் தேர்தலை சந்திக்கப் போகிறோம். அவர்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர். திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைந்த கூட்டணி போன்றது. விஜய் கட்சிக்கு இஞ்சினே இல்லை. விஜய் கட்சியின்  இஞ்சினை  ஓட்ட யார் இருக்கிறார்? மக்களை சிந்திக்க வைக்கும் வகையில் விஜய்யின் பேச்சு இல்லை. விசில் மற்றும் கைதட்டலுக்காகவே விஜய்யின் பேச்சுகள் இருக்கின்றன” என்றார்.
 

News Today Tamil Editor
எழுத்தாளர் / Author

Kathiravan

newstodaytamill@gmail.com

உண்மையான மற்றும் உடனுக்குடனான செய்திகளை வாசகர்களுக்குத் துல்லியமாக வழங்குவதில் அனுபவம் மிக்க செய்தி ஆசிரியர்.

Published: 03 Feb 2026, 12:00 AM Updated: 03 Feb 2026, 12:00 AM

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.