News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

டெல்லி கார் குண்டு வெடிப்பு- கனடா கவலை

டெல்லி கார் குண்டு வெடிப்பு- கனடா கவலை
0 கருத்துக்கள்

டெல்லியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்திற்கு கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் கவலை தெரிவித்தார். 

ஜி 7 நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி,ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு, கனடாவின் ஒண்டாரியாவில் உள்ள நயாகரா பகுதியில் நடைபெற்றது. இதில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டின் போது கனடா  வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்தித்து பேசினார். அப்போது, டெல்லியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்திற்கு அனிதா ஆனந்த் கவலை தெரிவித்தார்.

மேலும், இந்த துயரமான நேரத்தில் இந்திய மக்களுடன் கனடா துணை நிற்பதாகவும் அவர் கூறினார். இதனைத்  தொடர்ந்து, இரு நாடுகளிடையே எரிசக்தி, வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!