எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை கைது செய்ய போலீசார் குவிப்பு.
திமுக தொண்டர்களுக்கும் போலீசுக்கும் இடையே வாக்குவாதம்
தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலினின் பேச்சு சர்ச்சையான நிலையில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தஞ்சாவூர் போலீசார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்துள்ளனர்.
வீட்டிற்கு விசாரிக்க சென்ற போலீசாரிடம் முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கு பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.
தகவல் அறியும் உதயநிதி ஸ்டாலின் வீடு முன்பாக திமுக தொண்டர்கள் அதிக அளவில் குவியத் தொடங்கினர்.
இதை உதயநிதி வீடு அமைந்துள்ள பகுதியில் போலீசார் தடுப்புகள் அமைத்து திமுக தொண்டர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனால் அங்கு பரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.