News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
கல்வி

உலக தொல்குடிகள் தினம், பழங்குடி மக்களோடு பள்ளி மாணவர்கள் கலந்துரையாடல்

உலக தொல்குடிகள் தினம்,  பழங்குடி மக்களோடு பள்ளி மாணவர்கள் கலந்துரையாடல்
0 கருத்துக்கள்

உலக தொல்குடிகள் தினம்,

பழங்குடி மக்களோடு பள்ளி மாணவர்கள் கலந்துரையாடல்


உலக தொல்குடிகள் தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம், எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசன் மேல்நிலைப் பொருளியல் மாணவர்களை அழைத்துச் சென்று பேரையம்பட்டி ஊராட்சியில் அமைந்திருக்கும் அழகம்மாள்புரம் கிராமத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமூக-பொருளாதார நிலை பற்றிய கள ஆய்வு செய்தனர்.


மாணவர் வெற்றிமாறன் கூறும்பொழுது, இம்மக்களின் இருப்பிடம்,

குடும்ப அமைப்பு முறை, உணவு, மருத்துத்துவம், கல்வி, தொழில், வருமானம், நுகர்வு, சேமிப்பு, மொழி, கலாச்சாரம், பண்பாடு, அரசின் திட்டங்கள் போன்ற சமூக பொருளாதார காரணிகளை பற்றி தெரிந்து கொண்டோம் என்றார். இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில் இந்த கள ஆய்வு எங்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. எதிர்காலத்தில் பழங்குடியின மக்களின் சமூக -பொருளாதார முன்னேற்றம் பற்றிய ஆய்வு செய்ய வேண்டும் என ஆர்வத்தை அதிகரித்து உள்ளது என்றார்கள்.


ஆசிரியர் முருகேசன் கூறும்பொழுது, 'பொருளியல் மாணவர்கள் கடந்த சில ஆண்டுகளாக இம்மக்களின் சமூக-பொருளாதார நிலை பற்றிய கள ஆய்வு செய்து வருகின்றோம். மேலும் மாணவர்களின் முயற்சியால் கடந்த இரண்டு ஆண்டுகளாக குயாஸ் தொண்டு நிறுவனத்தின் மூலம் இங்கு உள்ள அனைத்து பழங்குடியின மக்களுக்கும் தீபாவளிக்கு புத்தாடைகள் வழங்கி வருகிறோம். தற்போழுது இம்மக்களுக்கு கல்வியும், விழிப்புணர்வு மிக முக்கிய தேவையாக உள்ளது. எதிர்காலங்களில் இவர்களுக்குத் தேவையான வசதிகளை அரசின் உதவியோடு செய்வோம்' என்றார்.



New Today Tamil Editorial Team
Published By

New Today Tamil Editorial Team

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.