மதுரையின் மிகப் பழமையான சென்ட்ரல் சினிமா தியேட்டரில் தீ விபத்து
மதுரை மீனாட்சியம்மன் கோவில் மேற்கு கோபுரம் அருகே மிகப் பழமை வாய்ந்த சென்ட்ரல் சினிமா தியேட்டர் அமைந்துள்ளது. ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கான தங்கம் தியேட்டர் உருவாக காரணமாக இருந்தது இந்த சென்ட்ரல் சினிமா தியேட்டர்.
இந்த தியேட்டரில் சினிமா திரைப்படங்கள் எதுவும் தற்போது திரையிடப்படவில்லை.
எனவே இத்தியேட்டர் வளாகம் கார் பார்க்கிங் ஆக செயல்படுகிறது.
நிலையில் இரவு சுமார் 7 மணி அளவில் இத்த திரையரங்கம் தீப்பிடிக்க ஆரம்பித்து தியேட்டர் முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்தது. மதுரை பெரியார் நிலையம், தல்லாகுளம் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்து வருகின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கோயிலுக்கு அருகே தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் அவர் நிர்மல் குமார் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து பழமையான கட்டடங்களை கண்காணிக்க ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.