கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வை கைது செய்து விசாரிக்க வேண்டும்
திமுக தலைவர் முக ஸ்டாலின் கோரிக்கை
கள்ளக்குறிச்சி பெண் கலெக்டருக்கு தவெக எம்எல்ஏ அருண் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. எம் எல் ஏ மீது கட்சித் தலைவர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்தும் கோரிக்கை எழுந்தது. ஆனால் முதல்வர் விஜய் இது நாள் வரை மௌனம் காத்து வந்தார். இந்நிலையில் குறிச்சி கலெக்டர் ஆபாச குறுஞ்செய்தி கொடுத்து எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
`இனியும் தாமதிக்காமல் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை கைது செய்து விசாரிக்க வேண்டும்.
தன் கட்சி எம்.எல்.ஏ.வையும் தன் மைனாரிட்டி அரசையும் காப்பாற்றினால் போதும் என இவர்கள் இந்த சம்பவத்தை மறைக்க அனைத்து வகைகளிலும் முயற்சித்ததால்தான், பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் முறையாகப் புகார் அளிக்கவே இத்தனை நாட்கள் ஆகியிருக்கின்றன. எனவே உடனடியாக கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.