தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: 17 கொலைகள் மற்றும் ரூ. 441 கோடி மது விற்பனைக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் கண்டனம்
தீபாவளிப் பண்டிகையின் போது தமிழகத்தில் இரு நாட்களில் 2 சிறுவர்கள், 2 பெண்கள், ஐடி ஊழியர், 3 ரவுடிகள் மற்றும் தேனி எஸ்எஸ்ஐ உள்பட மொத்தம் 17 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
தீபாவளி நாளான நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய இரு தினங்களில் மட்டும் டாஸ்மாக்கில் ரூ. 441 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை: கஞ்சா மற்றும் மது போதைக் கும்பல்களால் காவல்துறை அதிகாரிகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதுடன், காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. தற்போது தமிழகத்தில் கொலைக்கும் மது விற்பனைக்கும்தான் போட்டி நடைபெறுகிறது. நாம் வாழ்வது தமிழ்நாடா அல்லது கொலை நாடா என்ற சந்தேகம் எழுகிறது.
"தீபாவளிக்கு கொலை நடப்பது சாதாரணமானது" எனச் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பொறுப்பாற்ற முறையில் கூறிய கருத்தை கண்டனத்திற்குரியது.
போதைப் பொருள் புழக்கத்தை அரசு உடனடியாகத் தடுத்து விநியோக சங்கிலியை உடைத்தெறிய வேண்டும்.
பணியின் போது உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு, கடந்த கால எடப்பாடி பழனிசாமி ஆட்சியைப் போல ரூ. 1 கோடி நிவாரண நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியுள்ளார்.