News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

ஆன்மிகம்

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
NEWS TODAY TAMIL
Updated on: 01 May 2026, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

சித்திரையில் முத்திரை பதிக்கும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபகம் சிறப்பாக நடைபெற்றது.

 

மதுரையில் நடைபெறும் முக்கிய விழாக்களில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் விழாவும் முக்கியமாகும்.

 மீனாட்சி திருக்கல்யாணம் முடிவடைந்து நேற்று தேரோட்டமும் நடைபெற்ற நிலையில் வைகை ஆற்றில் இறங்குவதற்காக கள்ளழகர் நேற்று முன்தினம் அழகர் மலையில் இருந்து புறப்பட்டார்.

 நேற்று காலை மதுரை மூன்று மாவடியில் மதுரை மக்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

 இதைத் தொடர்ந்து பல்வேறு மண்டகப் படிகளில் ஏறி இறங்கி இரவு தல்லாகுளம் பெருமாள் கோயில் வந்தடைந்தார். 

அங்கு அவருக்கு பச்சை பட்டு உடுத்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அழகருக்கு அணிவிக்கப்பட்டு தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.

 இதை அடுத்து அங்கிருந்து கிளம்பிய கள்ளழகர் இன்று அதிகாலை ஆறு மணி அளவில் வைகை ஆற்றில் இறங்கினர். அப்போது வைகை ஆற்றில் குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா! கோவிந்தா! என்று கோஷமிட்டு சர்க்கரை கிண்ணங்களில் சூடம் ஏற்றி வணங்கினர். இப்போது கள்ளழகர் வேடமிட்ட பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து மரியாதை செலுத்தினர். 

 இதையடுத்து கள்ளழகர் ராமராயர் மண்டகப்படிக்கு சென்றார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.