முன்னாள் துணை மேயர் மன்னன் கைது.
30 கோடி ரூபாய் வரை பேரம் பேசிய வழக்கில்
மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ விடம் உதவியாளர் மூலமாக பண பேர பேசப்பட்டதாக முன்னாள் துணை மேயர் மன்னன் கைது செய்யப்பட்டார்.
மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ மதார் பதுரூதீன் (எ) முஸ்தபாவிடம் தவெக அரசுக்கு எதிராக வாக்களிப்பதற்காக 30 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாக கடந்த 2 தினங்களுக்கு முன்பு மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ மதார் பதுருதீன் புகாரின் அடிப்படையில் மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயரும், அதிமுக நிர்வாகியுமான பி.எம் மன்னனை மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று காலை கைது செய்தனர். காலை முதல் பி.எம். மன்னனனிடம் 8 மணி நேரத்திற்கு மேலாக மதுரை மாநகர காவல் துணை ஆணையர் திவ்யா தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
பி.எம்.மன்னின் செல்போன் உரையாடல் பதிவுகள் குறித்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது மன்னனின் ஆதரவாளர்கள் காவல் அலுவலகத்தில் குவிந்துள்ளதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
விசாரணை முடிவடைந்து பி.எம்.மன்னனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துசென்றனர்.
இதனிடையே மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ உதவியாளர் கனிராஜாவிடம் மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் மன்னனின் செல்போன் உரையாடல் தொடர்பாக கனிராஜாவின் செல்போன் அழைப்புகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
எம்எல்ஏ மதார் பதுருதீனின் உதவியாளர் கனிராஜா சில ஆண்டுகளுக்கு முன்பாக பி எம் மன்னனின் ஆதரவாளராக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட பி எம் மன்னனிடம் கனி ராஜா எத்தனை மணிக்கு பேசினார் என்னென்ன வார்த்தைகள் பேசினார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.