News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

உதயநிதியின் கனவு பலிக்காது: நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி

உதயநிதியின் கனவு பலிக்காது: நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி
0 கருத்துக்கள்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை அழித்து விடுவோம் என்று கூறுகிறார். ஆனால், அவருடைய கனவு பலிக்காது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். 

டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளை ஒட்டி சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  "அயோத்தி இந்தியாவில்தான் இருக்கிறது. அயோத்தி இங்கிலாந்திலோ அல்லது ஐரோப்பாவிலோ இல்லையே. அயோத்தி மாதிரி தமிழ்நாடு வரதுல வந்து தவறில்லை.

நாம் எல்லாம் ராமருடைய ஆட்சியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆக, அயோத்தி மாதிரி இருந்தாலும் சரி எப்படியானாலும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி, ராமருடைய ஆட்சி போல் வர வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

திருப்பரங்குன்றத்தில் தர்ஹா அருகில் உள்ள தீபத்தூண் என்ற ஒரு தூணில்தான் தீபம் ஏற்ற நீதிமன்றம் அனுமதித்துள்ளது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக, தர்ஹா சம்பந்தப்பட்டவர்களும், எந்த இஸ்லாமியர்களும் கூட எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால், முதலமைச்சர் சொன்னதைக் கேட்டு நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகப் பேசுவதை அவர்கள் விரும்பவில்லை.

இந்த விவகாரத்தில் மதக் கலவரம் வர எந்தவிதமான முகாந்தரமும் இல்லை. அப்படி இல்லாத பட்சத்தில், மதிப்புக்குரிய கனிமொழி, துணை முதலமைச்சரும் இதில் ஏன் பாசம் கொள்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை அழித்து விடுவோம் என்று கூறுகிறார் அவர் அதற்கான ஆரம்ப கட்ட வேலையில் ஈடுபடுகிறார் என்று நினைக்கிறேன். அவருடைய கனவு பலிக்காது. அவருடைய காலம் எத்தனை ஆண்டு காலம் ஆனாலும் சரி, எத்தனை யுகங்கள் ஆனாலும் சரி, சனாதன தர்மத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது" என்றார்.


Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!