News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
உலகம்

அமெரிக்க அதிபரை சுட்டுக் கொல்ல முயன்றவருக்கு ஆயுள் தண்டனை

அமெரிக்க அதிபரை சுட்டுக் கொல்ல முயன்றவருக்கு ஆயுள் தண்டனை
0 கருத்துக்கள்

அமெரிக்காவின் அதிபர் தேர்தலின் போது டொனால்ட் டிரம்ப்பை சுட்டுக் கொலை செய்ய முயன்றவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் கடந் 2024 செப்டம்பர் 15-ம் தேதி டொனால்ட் டிரம்ப் தனது வீட்டிற்கு அருகே கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரை துப்பாக்கியால் ஒருவர் சுட முயன்றார். அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்,  ரியான் வெஸ்லி ரூத் 59) என்பது தெரியவந்தது. அவருக்கு எதிராக சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருத்தல், கொலை முயற்சி போன்ற கடுமையான குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு வெஸ்லியை குற்றவாளி  என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில், அவருக்கான தண்டனை விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. அதில், வெஸ்லிக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்ற போது டிரம்பிற்கு எதிராக இந்த கொலை முயற்சி சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!