News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ்நாடு

சென்னையில் ரூ.53 லட்சம் நகை திருட்டு: கடையில் கைவரிசை காட்டிய பெண் சிக்கினார்:

சென்னையில் ரூ.53 லட்சம் நகை திருட்டு: கடையில் கைவரிசை காட்டிய பெண் சிக்கினார்:
NEWS TODAY TAMIL
Updated on: 06 Jul 2026, 12:00 am 2 min read
6 கருத்துக்கள்

சென்னை: நகைக் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து, ரூ.53 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிச் சென்ற பெண்ணை போலீஸார் கைது செய்தனர். சென்னை, எம்கேபி நகர், மேற்கு குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் அன்குஷ் (33). அப்பகுதியில் நகைக் கடை நடத்தி வருகிறார்.

சமீபத்தில் கடையில் இருந்த தங்க நகைகளின் இருப்பை சரிபார்த்த போது, சுமார் ரூ.53 லட்சம் மதிப்புள்ள 49 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து, அவர் நடத்திய விசாரணையில், கடந்த 2 மாதங்களில் ஒரே பெண் சுமார் 20 முறை கடைக்கு வந்து நகைகள் வாங்கியிருந்தது தெரிய வந்தது.

அந்த பெண் மீது சந்தேகம் ஏற்பட்டதால், இதுகுறித்து எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து நகைக்கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.

இதில், வாடிக்கையாளர் போல் நகைகளை வாங்குவது போல நடித்துவிட்டு, சிறிய அளவிலான தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக, மீஞ்சூர், பத்மாவதி நகரைச் சேர்ந்த ரெஹானா (50) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை யில், கடந்த 2 மாதங்களில் சுமார் 20 முறை நகைக்கடைக்கு வந்து, ஊழியர்களின் கவனத்தை திசைதிருப்பி சிறிய வகை தங்க நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.

அவரிடமிருந்து சுமார் 24 பவுன் தங்க நகைகளை போலீஸார் மீட்டனர். மேலும், மீதமுள்ள நகைகளை மீட்கவும் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, கைது செய்யப்பட்ட ரெஹானா சிறையில் அடைக்கப்பட்டா

ர்.



இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

A

arun pandian

14 Jul 2026, 06:49 PM

"Hellooooo"

A

arun pandian

14 Jul 2026, 06:49 PM

"How"

A

arun pandian

14 Jul 2026, 06:49 PM

"Oiii"

P

Pandiyaraj S

14 Jul 2026, 03:04 PM

"Haaa"

P

Pandiyaraj S

14 Jul 2026, 03:04 PM

"Haa haa 😁😁"

A

arun pandian

12 Jul 2026, 06:35 AM

"Romba Nalla Irukku Cong...."

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.