தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் நடவடிக்கை
புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படும் 543 புற்றுநோய் மருந்துகளின் (அதிகாரப்பூர்வமாக 137 புற்றுநோய் மருந்துகளின் பல்வேறு வடிவங்கள்/பிராண்டுகள்) அதிகபட்ச சில்லறை விலையை (MRP) தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அதிரடியாகக் குறைத்து திருத்தியமைத்துள்ளது.
நோயாளிகளின் நிதிச் சுமையைக் குறைக்கவும், உயிர்காக்கும் அதிநவீன புற்றுநோய் சிகிச்சைகளை எளிதில் அணுகவும் வியாபார லாப வரம்பு முறைப்படுத்தல் (Trade Margin Rationalisation - TMR) என்ற கொள்கையின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தப்பட்ட புதிய விலைப்பட்டியலின் படி, சில மருந்துகளுக்கு 90% வரை விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விலைகள் அமலுக்கு வரவுள்ளன.
முக்கியப் புள்ளிவிவரங்கள்
பாதிக்கப்பட்ட மருந்துகளின் எண்ணிக்கை: 137 மருந்துகள்
மருந்து வடிவங்களின் மொத்த எண்ணிக்கை: 543
விலையில் மாற்றமில்லாத மருந்து வடிவங்கள்: 146
ரூ.100-க்கும் குறைவாக விலை மாற்றம் ஏற்பட்டவை: 21 மருந்து வடிவங்கள்
சராசரி விலைக் குறைவு: ₹5,358 வரை குறைகிறது.
அதிக அளவில் விலை குறைக்கப்பட்ட சில முக்கிய மருந்துகளின் பழைய மற்றும் புதிய விலை விவரங்கள்:
மருந்து / பிராண்ட் பெயர்/பழைய MRP (₹)/திருத்தப்பட்ட MRP (₹)/குறைந்த தொகை (₹)
Thiotepa (SAMTEPA)₹80,071.86/7150.33/ 72,921.53
Pertuzumab (Hertumab)₹94,951.00/30,593.00/64,358.00
Bevacizumab (Ivzumab)₹69,852.12/13,512.00/56,340.12
Fulvestrant (Fulbrea)₹26,072.16/5,491.00/20,581.16
Denosumab (Debrumab 60 mg)₹22,031.25/5,941.00/16,090.25
Bevacizumab (BEVACIZAB)₹21,767.70/5,930.13/15,837.57
Fludarabine (FLUDANOX)₹14,235.00/2,432.00/11,803.00