மாநில கட்சிக்கான அங்கீகாரம் பெற்றது தவெக.
விஜயுடன் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் அபார வெற்றி பெற்று 108 இடங்களை பிடித்துள்ளது. ஆட்சி அமைக்க இன்னும் பத்து எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலையில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களுடன் விஜய் ஆலோசனை நடத்துகிறார்.
முன்னதாக தமிழக அரசு சார்பில் பதவி ஏற்பு விழா குறித்து ஆலோசனை நடைபெற்றது.
ஆட்சி மாறியதும் காட்சிகளும் மாறியது.
விஜயுடன் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். முதலமைச்சருக்கான கான்வாய் வாகனங்கள் நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு வந்தது.
சென்னை கலைவாணர் அரங்கம் அல்லது ராஜாஜி ஹாலில் பதவி ஏற்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.