கோயில்களில் விஐபி தரிசனத்தின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது .
பக்தர்கள் தரிசனத்துக்கு இடையூறு ஏற்படாதபடி கோயிலில் விஐபிக்களின் வருகையை ஒழுங்குபடுத்த வேண்டும்.
கோயில்களுக்கு முக்கியப் பிரமுகர்கள் வருகை குறித்து ஒருநாள் முன்னதாகவே நிர்வாகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.
முக்கியப் பிரமுகர்களை கோயில் வளாகத்தினுள் புகைப்படம், வீடியோ எடுக்க அனுமதி தரக்கூடாது.
விஐபிக்கள் வருகையின்போது கோயிலின் புனிதத்தன்மை, மரபுசார்ந்த விஷயங்கள் பாதிக்கக்கூடாது.
விஐபிக்களின் வருகை குறித்த வழிகாட்டுதல்களை அனைத்து கோயில்களிலும் பின்பற்ற அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.