News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

எந்த எல்கைக்கைக்கும் போக தயங்க மாட்டோம் : தேவர் சமுதாயத் தலைவர்கள் பேட்டி

எந்த எல்கைக்கைக்கும் போக தயங்க மாட்டோம் : தேவர் சமுதாயத் தலைவர்கள் பேட்டி
0 கருத்துக்கள்

எந்த எல்கைக்கைக்கும் போக தயங்க மாட்டோம் : தேவர் சமுதாயத் தலைவர்கள் 


மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை குடும்ப விவகாரத்தில் தலையிட்டால்


மதுரை மாட்டுத்தாவணி எதிர்புறமுள்ள செய்தியாளர்கள் அரங்கத்தில் தேவர் சமுதாய தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது‌.

இதில் தேவர் சமுதாய தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் அது பார்வர்டு பிளாக் செயலாளர் பிவி.கதிரவன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன் ஜி, மூமுக வேலுச்சாமி, பகவதி, மூவேட் பண்பாட்டுக் கழகத்தைச் சேர்ந்த மருது பாண்டியன், குருசாமி தேவர், அனைத்து அகமுடையார் ஒருங்கிணைப்பு குழு தலைவர் மருது ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.


தென் மாவட்ட மக்களுக்கு உயர்தரமான மருத்துவ சேவை குறைந்த செலவில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு மதுரையில் 1000 படுக்கை வசதிகளுடன் கூடிய மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் என்ற நிறுவனத்தை டாக்டர் N சேதுராமன் அவர்களால் தொடங்கப்பட்டு அவரது மகன் டாக்டர் S. குருசங்கர் அவர்களால் நிர்வகிக்கப்பட்டு கடந்த 36 ஆண்டுகளாக தமிழகத்திலே மிகச்சிறந்த மருத்துவமனை என்று மத்திய மாநில அரசுகளால் விருதுகள் பெற்று செயல்பட்டு வருகிறது..

 இம்மருத்துவமனைக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தோடு இம்மருத்துவமனையைப் பற்றி எதுவுமே தெரியாத பாண்டிச்சேரியில் தஞ்சம் புகுந்த லாட்டரி அதிபர் மார்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் என்பவர் இம்மருத்துவமனையை களங்கம் விளைவிக்கும் வகையில் லாட்டரி மாபியாவினால் நடத்தப்படும் தனியார் ( SS NEWS DIGITAL என்ற) செய்தி இணையதள சேனலில் மூலம் உண்மைக்குப்புறம்பான செய்திகளை வெளியிட்டு வருகிறது. இதற்கு லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்டினை சமுதாயத்தின் சார்பாக எச்சரிக்கிறோம்.


மருத்துவமனையையும், நிர்வாகத்தையும் களங்கம் விளைவிக்கும் வகையில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை செய்தி சேனலில் இருந்து முற்றிலும் நீக்கவேண்டும். மேலும் தவறான செய்தியை வெளியிட்டதற்கு பகிரங்க மன்னிப்பை இணையதள சேனலில் தெரிவிக்க வேண்டும். மன்னிப்பு கோராத பட்சத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எங்களின் சமுதாய மக்களின் சார்பாக சட்டரீதியான முற்றுகை போராட்டம் நடத்தப்படும். மீண்டும் இது போன்று தொடர்ந்து செயல்ப்பட்டால் எங்களது கூட்டமைப்பு சார்பில் எந்த எல்கைக்கைக்கும் போக தயங்க மாட்டோம்.


ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்கள் உண்மைக்குப்புறம்பான தவறான செய்தியை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தமிழக அரசின் பெயரையும் களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அணுகியுள்ளார். 

 எனவே ஜோஸ் சார்லஸ் மார்டின் மீது தமிழ்நாடு அரசு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமுதாயத் தலைவர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்‌ என்றனர்.




Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!