அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'ஜனநாயகன்' திரைப்படம் மக்களிடம் வரவேற்பைப் பெறாததால், அதிருப்தியடைந்த தவெக எம் எல் ஏ ஒருவர், பத்திரிகையாளர்கள் மீது குண்டர்களை வைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளார்.
பெண் அமைச்சர் ஒருவரின் தரமற்ற பேச்சு, ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அமைச்சர் காலணியுடன் சென்றது, மற்றும் ஐபிஎல் போட்டியின் போது போதைப்பொருள் விவகாரத்தில் மற்றொரு அமைச்சர் சிக்கியது போன்ற நிகழ்வுகள் தவெக அமைச்சரவையின் தரத்தைக் காட்டுவதாக உள்ளது
தமிழகத்தில் தவெக ஆட்சியில் அடாவடியும், கட்டப்பஞ்சாயத்தும் அதிகரித்துவிட்டது. ஆட்சி முதல்வர் விஜய் கையில் இருக்கிறதா அல்லது அவரது நட்பு வட்டாரமான ‘பவர் சென்டர்கள்’ கையில் இருக்கிறதா?.
உளவுத்துறை அறிக்கைகளை முதல்வர் விஜய் படிக்கிறாரா எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் இந்த அராஜகங்களை முதல்வர் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும். முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும் என மூலம் விஜய்க்கு வலியுறுத்தியுள்ளார்.