தமிழ்த் தாய் வாழ்த்துக்கு முதலிடம் வழங்குவதை உறுதி செய்யும் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் சட்டசபையில் முன்மொழிந்தார்.
தமிழ்னா கெத்து, தமிழ்னா பவர்.. தமிழ் என்று கூறினால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்றாக வந்து நிற்கும்.
தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டில் முதல் இடத்தில்தான் இருக்க வேண்டும்.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிப்பதுதான் மாநில உரிமை.
தமிழ்த்தாய் வாழ்த்தின் பெருமையை பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது.
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று கூறுவது அரசியல் சார்ந்த விவாதமாக மாற வேண்டிய அவசியம் இல்லை.
கட்சி வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தீர்மானத்தின் மொழிந்தார்.
இதற்கு திமுக ஆக்க உட்பட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக ஆதரவு.
அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானத்துக்கு திமுக ஆதரவு.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடவேண்டும் என முதலில் அரசாணை வெளியிட்டவர் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி.
தமிழ்த்தாய் வாழ்த்தை கட்டாயம் பாட வேண்டும் என 2021 டிச. 17இல் அரசாணை வெளியிட்டார் ஸ்டாலின்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றியவரின் பெயரில் உள்ள பல்கலை.யிலேயே 3ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
அடிக்கடி மாறுபடும் இந்த சூழலை மாற்றிட இதனை சட்டமாக மாற்ற வேண்டும்-சட்டமன்றத்தில் திமுக முன்னாள் அமைச்சர் கோவி.செழியன்.
அதிமுக ஆதரவு.
அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது யாருக்கும் எதிரானது அல்ல; தேசப்பற்றும் மொழிப்பற்றும் வேறு வேறானது அல்ல- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.