அண்ணாமலை ஐபிஎஸ் புதிய கட்சி தொடங்குவது உறுதியானது?
ரஜினிகாந்த் ஆதரவுடன்?
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதன்படி, பாஜக தலைவர் அண்ணாமலை புதிய கட்சி தொடங்க உள்ளதாகத் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில், அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரும், பாஜக ஐ டி விங்கைச் சேர்ந்த மதுரை ஆர். விஷ்ணு பிரசாத், வரும் 4ம் தேதி நடைபெறும் அண்ணாமலை பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கோவை, மதுரை என தமிழகம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டியுள்ளார். அந்தப் போஸ்டர்களில், அண்ணாமலை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளதுடன், "சிங்கம் ஒன்று புறப்பட்டதே" என்ற தலைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த போஸ்டரில் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ளும் திருநாவுக்கரசு என்பவரின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
விஷ்ணு பிரசாத் என்பவர் அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவர் அவரது போஸ்டரால் அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.