மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ஜனவரி முதல் செயல்பட தொடங்கும்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் நேகி நிமித்தமாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக குழு உறுப்பினர் இன்பதுரை எம்பியை சந்தித்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் குறித்து விளக்கியுள்ளார்.
இதுகுறித்து அதிமுக எம்பி இன்பதுரை தனது எக்ஸ் வலை தளம் பக்கத்தில் கூறியிருப்பதாவது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் நேகி தன்னை சந்தித்து, முதற்கட்டமாக 150 படுக்கைகளுடன் முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், ஜனவரி மாதம் முதல் செயல்பட தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.