News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

வைகோ நடைபயணத்தை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்!

வைகோ நடைபயணத்தை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்!
0 கருத்துக்கள்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நடைபயணத்தை திருச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  

தமிழகத்​தின் வாழ்​வா​தா​ரத்​தைப் பாது​காக்​க​வும், உரிமை​களை மீட்​க​வும் மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ சமத்​துவ நடைபயணம் என்ற பெயரில் தனது 11-வது நடைபயணத்தை திருச்​சி​யில் இன்று (ஜனவரி 2) தொடங்​கி, மதுரை​யில் ஜனவரி  12-ம் தேதி நிறைவு செய்​கிறார். இதன் துவக்க நிகழ்வு திருச்சியில் இன்று நடைபெற்றது.  துரை வைகோ எம்.பி வரவேற்புரையாற்றினார்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நடைபயணத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.  

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மெய்யநாதன், அன்பின் மகேஷ் பொய்யாமொழி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அகில இந்திய தலைவர் பேரா. காதர் மொய்தீன், விசிக தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச்செயலாளர் அருணாசலம், திராவிடர் கழக பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன்  உள்பட பலர் கலந்து  கொண்டனர். மதிமுக பொருளாளர் செந்திலதிபன் நன்றி கூறினார்.

இந்த நடைபயண நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியா கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. வைகோ நடத்தும் நிகழ்ச்சி  அழைப்பிதழின் முகப்பில் எல்டிடிஈ  இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் படம் இடம் பெற்றிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோவின் நடைபயண தொடக்க விழாவை புறக்கணிப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!