News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

நடிகை திரிஷா எப்போது துணை முதல்வர் ஆக்கப்படுவார்?

நடிகை திரிஷா எப்போது துணை முதல்வர் ஆக்கப்படுவார்?
0 கருத்துக்கள்

நடிகை திரிஷா எப்போது துணை முதல்வர் ஆக்கப்படுவார்?

 முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கேள்வி


முதல்வர் விஜய்யை வைத்து படம் எடுத்தால் தான் இனி தமிழ்நாட்டில் அரசு பதவி கிடைக்கும் என்றால் இது எப்படி ஜனநாயகமாக ஏற்றுக் கொள்ள முடியும்? என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார். அவரது அறிக்கையில், 



 முதல்வர் விஜய் திரைப்படங்களில் பணியாற்றிய தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தற்போது அரசு பொறுப்பில் சத்தமில்லாமல் நியமித்து வருகிறார்.

கோயில் அறங்காவலர் நியமனக் குழுவில் உறுப்பினராக முதல்வர் விஜப்யின் 'கோட்' பட தயாரிப்பாளர் கேரளாவைச் சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முதல்வர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' பட தயாரிப்பாளர் , கர்நாடகாவைச் சேர்ந்த வெங்கட் நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சரின் தனிச் செயலாளராக விஜய் நடித்த லியோ பட இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழக அரசு திரைப்பட பயிற்சி நிறுவன தலைவராக விஜய் நடித்த பீஸ்ட் பட ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா நியமிக்கப்பட்டுள்ளார்.


முதல்வரின் நட்புகள் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி, ராம்குமார் ஆகியோர் அரசின் ஆலோசர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

 முதல்வர் விஜயின் அன்புக்குரிய அண்ணி திரிஷா எப்போது தமிழ்நாட்டின் துணை முதல்வராக நியமனம் செய்து அறிவிப்பு வெளிவரும் என்று அதிர்ச்சியோடு ஆவலோடும் தமிழகம் காத்திருக்கிறது .

 முதல்வர் விஜய்யை வைத்து படம் எடுத்தால் தான் இனி தமிழ்நாட்டில் அரசு பதவி கிடைக்கும் என்றால் இது எப்படி ஜனநாயகமாக ஏற்றுக் கொள்ள முடியும்.

என கூறினார்.


Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!