News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு நலம்
ஆன்மிகம்

புஷ்கலா பகவதிஅம்மன் ஆலயத்தில் "அணையா விளக்கு" வைபவம்

 புஷ்கலா பகவதிஅம்மன்   ஆலயத்தில் "அணையா விளக்கு" வைபவம்
0 கருத்துக்கள்

மாம்பழத்துறை பகவதி அம்மன் 

ஆலயத்தில் "அணையா விளக்கு" வைபவம் 


கேரளம் மாநிலம் ஆரியங்காவு அருகே மாம்பழத்துறை ஶ்ரீ புஷ்கலா

பகவதி அம்மன் ஆலயத்தில்

வருகிற கார்த்திகை மாதம் 1 ஆம்

 தேதி (17 நவம்பர் 2026) காலை

07:00 மணியளவில் அணையா விளக்கு எனும் ""அகண்ட தீபம்" ஏற்றும் வைபவம் நடைபெறும்.

அன்று அதிகாலை நடை

 திறந்து அம்மனுக்கு சகல அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறும்.

தொடர்ந்து கோயில் பாரம்பரியத்தின்படி, மாம்பழத்துறை ஸ்ரீ புஷ்கலா பகவதி அம்மன் சான்னித்தியத்தில் உள்ள அம்மன் விளக்கில் இருந்து தீபத்தை மற்றொரு விளக்கில் ஆவாஹனம் செய்து அந்த அணையா விளக்கை, அகண்ட தீபமாக கோவில் முன் மண்டபத்தில் வைத்து வழிபாடு செய்யும் நடைமுறை துவங்கும்.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கோலத்தின் நடுவே, பச்சரிசி பரப்பிய தாம்பாளத்தில் கிழக்கு திசை நோக்கி இந்த "அகண்ட விளக்கு" ஸ்தாபனம் செய்யப்படும்.

தொடர்ந்து பாடலுடன் களமெழுத்து எழுதும் சடங்கு தொடங்கும். களம் வரைய முறையாக பயிற்சி பெற்ற சாந்திமார் இயற்கையான பல் வேறு வண்ண மூலிகைப் பொடிகளால் பகவதியின் திவ்ய நாம ரூபங்களை தத்ரூபமாக வரைந்து, தேவியின் கல்யாண குணங்களை பாட்டாக பாடி, வழிபாடு நடத்துவார்கள்.

"களமெழுத்து பாட்டு" எனும் மரபானது, இக்கோவில் பாரம்பரியத்தின் ஒரு தொன்மையான அடையாளமாகும்.

இல்லத்திலும், உள்ளத்திலும் நிலவி வரும் இருளையும் துயரங்களையும் நீக்கி, பக்தி, ஞான, வைராக்கியம், ஆயுள்,ஆரோக்கியம் ஐஸ்வர்யம் மற்றும் இறைவனின் அருளைப் பெற, ஒரு மண்டல காலம் முழுவதும் தொடர்ந்து பிரகாசித்துக் கொண்டு இருக்கும் ஶ்ரீ புஷ்கலா பகவதி அம்மனின் அகண்ட தீபத்தை தரிசித்து உள்ளத்தில் அருள் ஒளி பெறுவோம்.

அன்று பகவதியின் சான்னித்தியத்தில் நடைபெறும் அன்னதானத்தில் பங்கேற்று, அந்த வனத்தின் இயற்கை அமைதியோடு இணைந்து உணவருந்தும் அனுபவமும் நிச்சயமாக மனதில் இனிய நினைவாகத் தங்கும்.

ஒரு மண்டல காலம் முழுவதும் அணையாமல் ஒளிரும் அந்தத் தீபத்தைத் தரிசிக்க, கார்த்திகை முதல் நாளில் ஒருமுறையாவது மாம்பழத்துறைக்குச் சென்று வாருங்கள்.

அங்கே நீங்கள் காணப்போவது ஒரு விளக்கை மட்டுமல்ல.

உங்கள் மனதில் ஏற்றிக்கொண்டு வரப்போகும் ஒரு நம்பிக்கையின் ஒளியையும் தான்! 



Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!