News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

உலகம்

கிராமத்தினர் மீது கண் மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு- 162 பேர் பலியான சோகம்

 கிராமத்தினர் மீது கண் மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு- 162  பேர் பலியான சோகம்
NEWS TODAY TAMIL
Updated on: 05 Feb 2026, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

நைஜீரியாவில் இரண்டு கிராமங்களில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 162 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள குவாரா மாநிலத்தில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் இரண்டு கிராமங்களுக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 162 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். குவாராவில் உள்ள வோரா உள்ளிட்ட இரண்டு கிராமங்களுக்குள் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் உள்ளே நுழைந்து கண்மூடித்தனமாக சுட்டனர். அத்துடன் அங்கிருந்த கடைகளையும், மன்னரின் அரண்மனையையும் தீ வைத்து எரித்தனர்.

இந்த தாக்குதலில் 162 பேர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத குழுக்களே காரணம் என  அரசு குற்றம் சாட்டியள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த  பலர் காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர். இன்னும் பல சடலங்கள் கிடைக்கலாம். பாரம்பரிய மன்னர் எங்கு இருக்கிறாரென தெரியவில்லை என அதிகாரிகள் கூறினர். குவாரா மாநில ஆளுநர் அப்துல் ரஹ்மான் அப்துல் ரஸாக் இத்தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மாநிலத்தில் நடந்து வரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளால் ஏற்பட்ட விரக்தியில் பயங்கரவாத குழுக்கள் இந்தக் கோழைத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளன என தெரிவித்தார். குவாரா மாநிலத்தில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 162 பேர் கொல்லப்பட்டதாக சட்டமன்ற உறுப்பினர் சையது பாபா அஹமது தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலையடுத்து தீவிரவாதிகள் மற்றும் ஆயுதமேந்திய கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நைஜீரிய ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. 
 

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.