வங்கதேசத்தில் மீண்டும் இந்து இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிட்டதில் இருந்து கலவரம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தீபு சந்திரதாஸ் என்ற இந்து இளைஞரை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கும்பல் அடித்து நிர்வாணமாக்கி கொலை செய்தது. அத்துடன் அவரது உடலை தீயை வைத்து எரித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வங்கதேசத்தில் உள்ள ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித் மண்டல்(29) இந்து இளைஞரை, அப்பகுதியைச் சேர்ந்த கும்பலால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார். இதனால் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இக்கொலை தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். வங்கதேசத்தில் அடுத்தடுத்து 2 இந்து இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.