யாதவர் கல்விநிதி செயற்குழு உறுப்பினர் தேர்தல் முடிவுகள்யாதவர் கல்விநிதி செயற்குழு உறுப்பினர் தேர்தல் முடிவுகள் வெளியீடு
மதுரை:
மதுரை திருப்பாலை கோவிந்தராசன் வளாகத்தில் இயங்கி வரும் யாதவர் கல்விநிதி சங்கத்தின் 2026 - 2029-ஆம் ஆண்டிற்கான செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த 29.08.2026 (சனிக்கிழமை) அன்று நடைபெற்றது.
இத்தேர்தலில் மொத்தம் 25 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதனைத் தொடர்ந்து, 31.08.2026 (திங்கட்கிழமை) அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் வாக்குகள் அடிப்படையில் முதல் 11 இடங்களைப் பெற்ற பின்வரும் நபர்கள் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்:
திரு. KPS கண்ணன்
திரு. M. மணிமாறன்
திரு. RVN கண்ணன்
திரு. C. கிருஷ்ணவேல்
திரு. P. செந்தில்
திரு. S. முத்துக்குருஷ்ணன் (எ) கிட்டு
திரு. R. ரெங்கராஜன்
திரு. T. வெங்கடாசலபதி
திரு. T. N. சுப்பையா
திரு. K. ராஜ்குமார்
திரு. P. சேகர்
வெற்றி பெற்ற செயற்குழு உறுப்பினர்களுக்கு, தேர்தல் அதிகாரிகளான வழக்கறிஞர் திரு. C. கண்ணன், வழக்கறிஞர் திரு. C. கார்த்திக் மற்றும் திரு. M. சந்தவழியான் ஆகியோர் வெற்றிச் சான்றிதழை வழங்கினர்.
வெற்றி பெற்ற செயற்குழு உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது.
கே பி எஸ் கண்ணன் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.