News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

அதிமுக கூட்டணியில் பாமக- எடப்பாடி பழனிசாமி பேட்டி!

அதிமுக கூட்டணியில் பாமக- எடப்பாடி பழனிசாமி பேட்டி!
0 கருத்துக்கள்

அதிமுக கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக இணைந்துள்ளது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். 

சென்னை  சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பாமக தலைவர் அன்புமணி இன்று வருகை தந்தார். சட்டமன்றத் தேர்தல் குறித்து அவர்கள் விவாதித்தனர். இதன் பின்  கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. 

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், " அதிமுக கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக இணைந்துள்ளது.  மேலும் சில கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணைவார்கள்.  இயற்கையாக அமைந்த கூட்டணி அதிமுக-பாமக கூட்டணி. திமுக அரசை தூக்கி எறிந்து அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எங்களது கூட்டணி வெற்றிக்கூட்டணி" என்று தெரிவித்தார். 

இதன்பின் அன்புமணி செய்தியாளர்களிடம் கூறுகையில்,. " பாமக தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணி அமைந்துள்ளது. மக்கள் விரோத திமுக கூட்டணியை அகற்றுவதற்காக அதிமுகவுடன் கைகோர்த்துள்ளோம்.  வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெருவாரியான தொகுதிகளில் வென்று ஆட்சி அமைக்கும்" என்றார். 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!