உலக நன்மை வேண்டி மதுரையில் 150 வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க அதிருத்ர மகா யக்ஞம் துவக்கம்
வருகிற 28 ஆம் தேதி வரை தினமும் ஸ்ரீ ருத்ர ஜபம்*
மதுரை மகா ருத்ர மகா யக்ஞ கமிட்டி சார்பில் 31 ஆம் ஆண்டு அதிருத்ர மகாயக்ஞம் மதுரை தல்லாக்குளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் துவங்கியது.
உலக நன்மைக்காகவும், தேசம் வளமாக இருக்கவும் வேண்டி 150 வேத விற்பன்னர்களை கொண்டு வேத மந்திரங்கள் முழங்க அதிகாலை 5:00 மணிக்கு ரித்விக்குகள் வரவேற்புடன் நிகழ்ச்சி துவங்கியது.
டிச.27 வரை தினமும் காலை 8:30 மணிக்கு ஸ்ரீருத்ர ஜபம்.மகா தீபாராதனை நடைப்பெறுகிறது. தொடர்ந்து மதியம் அன்னதானமும் நடைப்பெறுகிறது. இன்று நடைப்பெற்ற நிகழ்ச்சியில் திரன பக்தர்கள் கலந்து கொண்டனர். சில பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற ஓம் நமச்சிவாயா என 108 முறை எழுதினர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து டிச.28 மதியம் 1:00 மணிக்கு வஸோர்தாரா, பூர்ணாகுதி ஹோமம் நடக்கிறது.
டிச.29 பிராமண சந்தர்ப்பனையுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை மகாருத்ர மகாயக்ஞ கமிட்டியினர் செய்துள்ளனர்.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மகா ருத்ர மகா யக்ஞ கமிட்டியை சேர்ந்த சேது சாஸ்திரிகள் ஶ்ரீதர், எஸ்.சேதுராமன், சத்யநாராயணன் உட்பட 160 வேத விற்பன்னர்கள் பங்கேற்று உலக நலனுக்காக ஜெபித்தனர். இந்நிகழ்வில் மதுரை சத்குரு சமாஜம்செயலாளர் டாக்டர் ராஜாராம் ,மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.