இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள மனாடோவில் செயல்படும் முதியோர் இல்லத்தில் திடீரென தீப்பற்றியது. இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 6 வாகனங்களில் சென்று தீயை போராடி அணைத்தனர். ஆனாலும், தீயில் கருகி 16 முதியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 15 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்துகின்றனர்.