News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

உலக அமைதிக்காக காஷ்மீர் முதல் குமரி வரை சகோதரர்களின் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்

உலக அமைதிக்காக காஷ்மீர் முதல் குமரி வரை சகோதரர்களின் விழிப்புணர்வு  சைக்கிள் பயணம்
0 கருத்துக்கள்

*உலக அமைதிக்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் 

 

 சகோதரர்களுக்கு மதுரையில் வரவேற்பு*

 

மத்தியபிரதேச மாநிலம் நர்சிங்பூர் பகுதியை சேர்ந்த டாக்டர் ஆனந்த்துபே மற்றும் அவரது சகோதரரான ஆசிரியர் தேவேந்திர துபே ஆகிய இருவரும் உலக அமைதிக்காகவும், சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும், மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 5000 கிலோ மீட்டர் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர்.

டிசம்பர் 25ஆம் தேதி காஷ்மீரில் புறப்பட்ட சகோதரர்கள் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய நிலையில் நேற்று கன்னியாகுமரி சென்றடைந்தனர். இதையடுத்து மதுரை காந்தி அருங்காட்சியகத்திற்கு வருகை புரிந்த துபே சகோதரர்கள் மகாத்மாகாந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து வந்தே மாதரம் கோஷம் எழுப்பி தங்களது விழிப்புணர்வு பயணத்தை நிறைவு செய்தனர்.

மதுரைக்கு வருகைதந்த வந்த துபே சகோதரர்களை காந்தி அருங்காட்சியக செயலாளர் நந்தாராவ்,, மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க பட்டய தலைவர் நெல்லை பாலு உள்ளிட்டோர் மாலை அணிவித்து வரவேற்றனர். பின்னர் ஆனந்த துபே செய்தியாளர்களிடம் பேசிய போது: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் இடங்களில் எல்லாம் மரங்கள் வளர்க்க வலியுறுத்தியும், மரங்களை வளர்ப்பதால் வெப்பத்தின் தாக்கம் குறையும், சுற்றுச்சூழல் மாசுபாடு அடையாமல் இருக்கும், மழை பொழியும் என்றனர்.

நட்டின் 21 நதிகளுடைய தண்ணீரின் அளவு மிகவும் குறைந்துள்ளது. சுற்றுச்சூழல் மாறுபாடு காரணமாகவும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்ததின் காரணமாகவும் தண்ணீரின் அளவு மிகவும் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். 

அதோடு பாரத பிரதமர் மோடி அவர்களால் கொண்டுவரப்பட்ட ஜல்ஜீவன் மிஷன் என்கிற திட்டம் ஒரு சிறப்பான நீர் மேலாண்மைக்கான திட்டமாக பார்க்கிறோம் என்றனர்.

இந்த சைக்கிள் பயணத்தால் 15 கிலோ உடல் எடை குறைந்ததாகவும், ஆரோக்கியமாக இருப்பதாகவும் கூறினர்.

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!