News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
உலகம்

பாகிஸ்தானில் பதற்றம்... 2 நாட்களில் 145 பேர் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் பதற்றம்... 2 நாட்களில் 145 பேர் சுட்டுக்கொலை
0 கருத்துக்கள்

பாகிஸ்தானில் கடந்த 40 மணி நேரத்தில் 145 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக  பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியான பலோசிஸ்தான் மாகாணத்தில், கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் 145 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு படை தெரிவித்துள்ளனது. இதுதொடர்பாக  பலோசிஸ்தான் முதல்வர் சர்பராஸ் புக்டி கூறுகையில், "கடந்த 40 மணி நேரத்தில் 145 பயங்கரவாதிகளை நாங்கள் அழித்துள்ளோம்.. இந்த வன்முறையில் 31 பொதுமக்களும், 17 பாதுகாப்பு படையினரும் உயிரிழந்தனர்" என்று  அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று பலூச் தேசியவாத அமைப்புகள் போராடி வருகின்றன. தங்களது இயற்கை வளங்களில் அதிக பஙகு மற்றும் அரசியல் உரிமைகளை கோரி நீண்ட காலமாக போராடி வருகின்றன. இதன் காரணமாக கடந்த ஆண்டு முதல் பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிர்த்துள்ளன.  தென் ஆசிய பயங்கரவாத தகவல் மைய தரவுகளின்படி, 2024-ம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தானில்  3,967 பேர் இத்தகைய தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர். இது 2015க்கு பிந்தைய காலக்கட்டத்தில் மிக உயர்ந்த எண்ணிக்கையாகும். இந்த நிலையில், கடந்த 40 மணி நேரத்தில் 145 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, வார இறுதியில் மாகாணத்தின் பல மாவட்டங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால், அவற்றை கட்டுப்படுத்த பாதுகாப்பு படைகள் களமிறங்கின. இந்த தாக்குதல்களுக்கு இந்திய ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதிகளே காரணம் என பாகிஸ்தான் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை இந்தியா அடிப்படையற்றது என்று  திட்டவட்டமாக மறுத்துள்ளது.
 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!