News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார்

திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார்
0 கருத்துக்கள்

சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் இன்று (டிசம்பர் 4) காலமானார். அவருக்கு வயது 86.

இந்திய திரைப்படத்துறையில் பழமையான ஏவிஎம் நிறுவனம் தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளது. திரையுலகின் ஜாம்பவான்களான சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகியோரை வெள்ளித்துறையில் அறிமுகம் செய்த நிறுவனம் ஏவிஎம் தான். இந்த நிறுவனத்தை தொடங்கிய ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின்  மகன்களில் ஒருவர்தான் ஏவிஎம் சரவணன்.

ஏவிஎம்  திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் நிர்வாக ரீதியாக பல்வேறு பொறுப்புகளை ன் கவனித்துள்ளார். இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பையும் இவர் கவனித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றுள்ளார்.

சென்னை வடபழநியில் உள்ள அவரது இல்லத்தில் வயது மூப்பின் காரணமாக இன்று காலை அவர் காலமானார். தற்போது அவரது உடல் ஏவிஎம் ஸ்டுடியோவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.  அவரது உடல் இன்று மாலை 3 மணிக்கு மேல் ஏவிஎம் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!