News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

உலகம்

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது: ஜெனீவாவில் ஜீன்-19.ம் தேதி கையெழுத்து:

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது: ஜெனீவாவில் ஜீன்-19.ம் தேதி  கையெழுத்து:
NEWS TODAY TAMIL
Updated on: 15 Jun 2026, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சுமார் மூன்று மாத காலம் நிலவி வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. இரு தரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது. வரும் ஜீன் .19ம் தேதியன்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதி ஒப்பந்தம் இறுதியான சூழலில் லெபனான் உள்ளிட்ட அனைத்து போர் முனைகளிலும் ராணுவ நடவடிக்கை முடிவுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தி உடனடியாக கப்பல் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ல் போர் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 8-ம் தேதி இடைக்கால போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது. இரு தரப்புக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சற்று இழுபறி நிலவிய சூழலில் தற்போது இரண்டு தரப்பும் அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளன.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்தது. இந்நிலையில், இரண்டு தரப்புக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டதை பாகிஸ்தான் நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முதல் நபராக அறிவித்தார்.

தீவிர பேச்சுவார்த்தைக்கு பின்னர் அமெரிக்காவும், ஈரானும் அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளன. இரண்டு தரப்பும் உடனடியாக ராணுவ ரீதியான நடவடிக்கையை நிறுத்துவதாக தெரிவித்துள்ளன. வரும் 19-ம் தேதி சுவிட்சர்லாந்து நாட்டில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்ப்பதாக எக்ஸ் சமூக வலைதள பதிவில் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

இரு தரப்புக்கும் இடையே சுமூக பேச்சுவார்த்தை மேற்கொள்ள கத்தார், சவுதி அரேபியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளும் உறுதுணையாக இருந்ததாக ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமரின் அறிவிப்பை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அமைதி ஒப்பந்தம் இறுதியானதை உறுதி செய்தார்.

“ஈரான் இஸ்லாமிய குடியரசு நாட்டுடன் அமைதி ஒப்பந்தம் இப்போது நிறைவடைந்துள்ளது. அனைவருக்கும் பாராட்டுகள். உலக நாடுகளின் கப்பல்கள் அதன் என்ஜினை ஸ்டார்ட் செய்யலாம். ஹார்முஸ் ஜலசந்தியை கட்டணமின்றி கடக்கலாம். அதே நேரத்தில் அமெரிக்க கடற்படை முற்றுகை திரும்பப் பெறப்படுகிறது” என ட்ரூத் சோஷியல் சமூக வலைதள பதிவில் ட்ரம்ப் கூறியுள்ளார்.

வரும் 19-ம் தேதி ஜெனிவாவில் கையெழுத்தாக உள்ள அமைதி ஒப்பந்தத்தில் ட்ரம்ப் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் இறுதியானதை ஈரானும் உறுதி செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தங்கள் நாட்டின் கடற்பகுதி அமெரிக்க ராணுவ முற்றுகையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

லெபனான் உள்ளிட்ட பிராந்தியத்தின் அனைத்து பகுதிகளிலும் போர் முடிவுக்கு வந்துள்ளதாக ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. இதை ஈரானின் அரசு செய்தி நிறுவனமும் உறுதி செய்துள்

ளது.





இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.