News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ்நாடு

தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க நீலகிரியில் பெருகி வரும் பிளாஸ்டிக் கிணறுகள்:

தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க நீலகிரியில் பெருகி வரும் பிளாஸ்டிக் கிணறுகள்:
NEWS TODAY TAMIL
Updated on: 28 Jun 2026, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

ஊட்டி: தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பிளாஸ்டிக் கிணறுகள் அமைத்து விவசாய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், மலைபாங்கான பகுதிகளை கொண்டது. இங்கு மலைப்பாங்கான பகுதிகளிலும் பள்ளத்தாக்கு பகுதிகளிலும் விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு பெரும்பாலும் பருவமழை நம்பி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். அதனை தொடர்ந்து, அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவ மழையும் பெய்யும். அதன்பின், 6 மாதங்கள் மழை பெய்யாது.

இது போன்ற சமயங்களில் மலைப்பாங்கான பகுதிகளில் போதிய தண்ணீர் இன்றி விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், விவசாய நிலங்களுக்கு நடுவே உள்ள அனைத்து கிணறுகளும் காய்ந்து போன நிலையில் தண்ணீர் இன்றி விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. இதுபோன்ற சமயங்களில் சில விவசாயிகள் லாரிகளில் தண்ணீர் வாங்கி அவைகளை சேமித்து வைத்து பயிர்களுக்கு பாய்ச்ச வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதுபோன்ற சமயங்களில் சாதாரண கிணறுகளில் தண்ணீர் சேமித்து வைக்க முடிவதில்லை.

கிணற்றில் உள்ள தண்ணீர் நிலத்திற்குள் சென்று விடுகிறது. இதனை கட்டுப்படுத்தவும் அதே சமயம் தண்ணீரை சேமித்து வைக்கவும்,நிலத்திற்குள் செல்லாமல் இருக்க தற்போது செயற்கை குளங்களை அமைத்துக் கொள்கின்றனர்.

விவசாய நிலங்களுக்கு நடுவே பிளாஸ்டிக் பேப்பர்களை கொண்டு கிணறுகளை சுற்றிலும் வைத்து மூடி விடுகின்றனர். இதனால், சேமித்து வைக்கப்படும் தண்ணீர் மற்றும் லாரிகளில் வாங்கும் தண்ணீர் சிறிதளவும் வீணாகாமல் பயிர் களுக்கு பாய்ச்சப்படுகிறது.

முத்தோரை பாலாடா, கேத்தி பாலாடா,தேனாடுகம்பை,காவிலோரை, அணிக்கொரை போன்ற பகுதியில் தற்போது பெரும்பாலான விவசாய நிலங்களில் இது போன்று பிளாஸ்டிக் கிணறுகள் அமைக்கப்பட்டு பயிர் களுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இம்முறை எதிர்பார்த்த அளவிற்கு தென்மேற்கு பருவமழை பெய்யாத நிலையில் அனைத்து பகுதிகளிலும் தற்போது பிளாஸ்டிக் கிணறுகள் அமைத்து தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டு விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு தண்ணீர் பிரச்னை குறைந்துள்ளது. இதனால், தற்போது பெரும்பாலான விவசாயிகள் தங்களது நிலங்களில், இதுபோன்ற பிளாஸ்டிக் கிணறுகள் அமைத்து வருகின்ற

னர்.



இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.