News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

இரட்டை கொலை செய்தவரை சுட்டுப்பிடித்த போலீஸ்

இரட்டை கொலை செய்தவரை சுட்டுப்பிடித்த போலீஸ்
0 கருத்துக்கள்

ராஜபாளையம் அருகே கோயில் பாதுகாவலர்கள் இருவரை கொலை செய்தவரை போலீஸார் சுட்டுப் பிடித்தனர். 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானத்தில் நச்சாடை தவிர்த்தருளிய நாதர் கோயிலுக்குள் நள்ளிரவில் ஒரு கும்பல் புகுந்தது. அங்கிருந்த உண்டியலை உடைத்து அந்த  கும்பல் கொள்ளையடிக்க  முயற்சி செய்தது. இதைத் தடுத்த கோயில் காவலர்கள் பேச்சிமுத்து, சங்கரபாண்டியனை அந்த கும்பல் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடியது. மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில்,கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சிலரைபிடித்து விசாரித்தனர். அப்போது கொலையாளி என கருதப்படும் நாகராஜை போலீஸார் பிடிக்க முயன்றனர். ஆனால், போலீஸாரை தாக்கி விட்டு அவர் தப்ப முயன்றார். ஆனால், போலீஸார் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய முனியசாமி என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர். 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!