News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ்நாடு

வெற்றியால் எங்களுக்கு அகங்காரம் இல்லை: பிரதமர் மோடி பேட்டி

வெற்றியால் எங்களுக்கு அகங்காரம் இல்லை: பிரதமர் மோடி பேட்டி
NEWS TODAY TAMIL
Updated on: 01 Dec 2025, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

தொடர் வெற்றியால் எங்களுக்கு அகங்காரம் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.   

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அதற்கு முன்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், " இன்று நடக்கும் நாடாளுமன்ற கூட்டம்  இந்தியா வளர்ச்சிக்கு உதவும். இந்தியா வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பிஹாரில் ஜனநாயக குரல் தேர்தல் மூலம் எதிரொலித்தது. இந்த தோல்வியை மனதில் கொண்டு எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யக்கூடாது.

பிஹார் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் இருந்து மீண்டு வந்து, தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். தொடர் வெற்றியால் எங்களுக்கு அகங்காரம் இல்லை. இந்தியா எப்போது ஜனநாயகத்தை காக்கும் நாடாக விளங்குகிறது.

நாடாளுமன்றத்தை கூச்சல், குழப்பம் ஏற்படுத்தும் இடமாக பயன்படுத்தக் கூடாது. குளிர்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும். குறிப்பாக, மக்கள் பிரச்னை குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும். இளம் எம்.பி.க்கள், முதல் முறை எம்.பி.க்களை  அதிக நேரம் பேச முன்னுரிமை அளிக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் தங்கள் அமளியை அவைக்கு வெளியே வைத்துக் கொள்ளட்டும். அவைக்கு உள்ளே அமளியில் ஈடுபடக் கூடாது" என்றார். 

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.