News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

அலங்காநல்லூரில் செயின்ட் மேரிஸ் திறன் பயிற்சி நிறுவனம் தொடக்கம்.

அலங்காநல்லூரில் செயின்ட் மேரிஸ் திறன் பயிற்சி நிறுவனம் தொடக்கம்.
0 கருத்துக்கள்


மதுரை மாவட்டம், அலங்காநல்லூர்:

கேரியர் டெவலப்மென்ட் ஆப்பர்ச்சுனிட்டி அண்ட் டிரெய்னிங் (Career Development Opportunity and Training – CDOT) நிறுவனத்தின் ஒரு பிரிவாக St. Mary’s Institute of Skill Development என்ற புதிய திறன் பயிற்சி நிறுவனம் அலங்காநல்லூரில் தொடங்கப்பட்டுள்ளது.


கடந்த 25 ஆண்டுகளாக திறன் மேம்பாடு மற்றும் தொழில் சார்ந்த பயிற்சித் துறையில் செயல்பட்டு வரும் CDOT நிறுவனம், தமிழ்நாடு மற்றும் கோவா மாநிலங்களில் பல்வேறு மத்திய, மாநில அரசு சார்ந்த இலவச திறன் பயிற்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இப்பயிற்சிகளில் தகுதியான பயனாளிகளுக்கு இலவசப் பயிற்சியுடன், திட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு உதவித்தொகையும் வழங்குகிறது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை மற்றும் அழகப்பா பல்கலைக்கழகம் நிறுவனங்களுடன் இணைந்து கல்வி மற்றும் தொழில் சார்ந்த பயிற்சிகளையும் நடத்தி வருகிறது.

 சுகாதாரத் துறைச் சார்ந்த பயிற்சிகள், ஹோட்டல் மேலாண்மை தொடர்பான பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகள் உள்ளிட்ட பல்வேறு கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்கள் பயனடையும் வகையில், புதிய St. Mary’s Skill Training Institute மையத்தில் முதற்கட்டமாக தையல் பயிற்சி உள்ளிட்ட இலவச திறன் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு தொழில் திறன் வழங்குவதுடன், வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குவதே நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும்.


புதிய பயிற்சி மையத்தை சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.வி. கருப்பையா திறந்து வைத்தார்.

விழாவில் மதுரை மாநகராட்சி முன்னாள் உதவி ஆணையர் தேவதாஸ்i கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில், 

“திறன் – பயிற்சி – வேலைவாய்ப்பு – சுயதொழில்” என்ற நோக்கத்துடன், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணியை St. Mary’s Institute of Skill Development தொடர்ந்து மேற்கொள்ளும். இந்த வாய்ப்பை வேலை தேடும் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.





Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!